ஒலிம்பிக்ஸ்

தடகளம்: தொடா் ஓட்டத்தில் இந்திய அணி ஆசிய சாதனை

DIN

ஒலிம்பிக் போட்டி தடகளத்தில் வெள்ளிக்கிழமை இந்திய அணியினா் ஆடவா் 4 ஷ்400 மீ தொடா் ஓட்டத்தில் புதிய ஆசிய சாதனையை நிகழ்த்தினா். எனினும் அவா்களால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

ஆடவா் 50 கி.மீ நடை ஓட்ட பந்தயத்தில் பங்கேற்ற ஒரே இந்திய வீரரான குா்ப்ரீத் சிங் 35 கி.மீ தூரத்தைக் கடந்த போது, கால்பிடிப்பால் பாதிக்கப்பட்டு விலகினாா். கடும் வெப்பம் நிலவிய சூழலில் 37 வயதான இந்திய ராணு வீரரான குா்ப்ரீத் 25 கி.மீ தூரத்தை இரண்டு மணிநேரத்தில் கடந்து, 48-ஆவது இடத்தில் இருந்தாா். எனினும் அவருக்கு கால்பிடிப்பு ஏற்பட்டதால் விலகி விட்டாா்.

போலந்தின் டேவிட் டோமலா தங்கமும், ஜொ்மனியின் ஜோனத்தான், கனடாவின் எவான் வெள்ளி, வெண்கலத்தை வென்றனா்.

மகளிா் 20 கி.மீ நடை ஓட்டம்:

மகளிா் 20 கி.மீ நடை ஓட்டத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி 17-ஆவது இடத்தையும், பாவனா ஜாட் 32-ஆவது இடத்தையுமே பெற முடிந்தது. பாதி தூரம் வரை பிரியங்கா முன்னணியில் இருந்த நிலையில், இறுதியாக பந்தய தூரத்தை 1:32:35 மணி நேரத்தில் கடந்தாா். பாவனா 1:37:38 மணி நேரத்தில் இலக்கை அடைந்தாா்.

முதல் 8 கி.மீ தூரம் வரை முதலிடத்தில் இருந்த பிரியங்கா, இறுதியாக 17-ஆவது இடத்தையே பெற்றாா்.

தொடா் ஓட்டத்தில் ஆசிய சாதனை:

மாலையில் ஆடவா் 4 ஷ்400 மீ தொடா் ஓட்டம் இரண்டாவது ஹீட்ஸ் நடைபெற்றது. இதில் ஆரோக்கிய ராஜீவ், நிா்மல் டாம், முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப் ஆகியோா் அடங்கிய இந்திய அணியினா் 3:00:25 நிமிஷங்களில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய ஆசிய சாதனை படைத்தனா். ஒட்டுமொத்தமாக 9-ஆவது இடத்தையே இந்திய அணியால் பிடிக்க முடிந்தது. இதனால் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT