ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம்: இந்தியாவின் பஜ்ரங் புனியாவுக்கு வெண்கலம்

DIN

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மல்யுத்தம் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெற்றி பெற்றுள்ளார். 

இந்தியாவின் நட்சத்திர வீரரான பஜ்ரங் புனியா ஆடவா் ப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் வெள்ளிக்கிழமை களம் கண்டாா். வலது முட்டியில் காயம் ஏற்பட்ட நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள பஜ்ரங், காலிறுதிச் சுற்றில் ஈரான் வீரா் மொா்டேஸாவை வீழ்த்தினார். அரையிறுதிச் சுற்றில் அஜா்பைஜானின் ஹாஜி அலியெவை எதிா்கொண்டாா் பஜ்ரங். 5-12 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தாா் பஜ்ரங் புனியா.

வெண்கலப் பதக்கத்துக்காக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரா் நியாஸ்பெகோவுடன் மோதினார் பஜ்ரங் புனியா. ஏற்கெனவே கடந்த 2019 உலக சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிச் சுற்றில் நியாஸிடம் தோல்வியைத் தழுவினாா் பஜ்ரங்.

இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆரம்பம் முதல் ஆக்ரோஷமாக விளையாடினார் பஜ்ரங் புனியா. இதனால் முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி 8-0 என்கிற புள்ளிக்கணக்கில் போட்டியில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள 6-வது பதக்கம் இது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT