ஒலிம்பிக்ஸ்

உசைன் போல்ட்: மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஓட்டப்பந்தயங்களின் விடியோ

ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட்டுக்குத் தோல்வியே ஏற்பட்டதில்லை.

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமர்க்களமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரே குறை, உசைன் போல்ட் இல்லாததுதான். 

2008 முதல் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட், 100 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 200 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் 2 தங்கம் என மொத்தம் 8 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மேற்கண்ட மூன்று ஓட்டப்பந்தயங்களிலும் போல்ட் வசமே உலக சாதனைகள் உள்ளன. முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே மூன்று தங்கம், மூன்று உலக சாதனைகள் என ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட்டுக்குத் தோல்வியே ஏற்பட்டதில்லை. மூன்று ஒலிம்பிக்ஸில் மூன்று போட்டிகளில் கலந்துகொண்டு அனைத்திலும் தங்கம் வென்றார். 100% வெற்றி. 

நவீன ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீ. மற்றும் 200 மீ. ஓட்டப்பந்தயங்களில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தவர் போல்ட். 2008, 2012, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் 4*100 மீ. தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார் போல்ட். ஆனால்  2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் அவருடைய அணியில் இடம்பெற்ற நெஸ்டா கார்டர் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் 2017-ல் தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது. இதனால் ஒலிம்பிக் போட்டியில் போல்ட் பெற்ற ஒரு தங்கப் பதக்கம் குறைந்துவிட்டது. 

ஒலிம்பிக் போட்டிகளில் போல்ட் பங்கேற்ற 9 ஓட்டப்பந்தயங்களின் விடியோ ஒலிம்பிக் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT