ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்: ஜப்பான் பிரதமருக்கு ஜோ பைடன் வாழ்த்து

ANI

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,

“ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியின்போது பொது சுகாதாரத்தை சிறப்பாக கையாண்ட ஜப்பானில், பாரா ஒலிம்பிக் போட்டியை நடத்த தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக பைடன் உறுதியளித்துள்ளார்.”

கரோனா காரணமாக இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்களின்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற்றன. இதில் 200 நாடுகளை சேர்ந்த 11,000 வீரர்கள் பங்கேற்றனர். 

இப்போட்டியில், அதிகபட்சமாக அமெரிக்கா 113 பதக்கங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT