முகப்பு
ஒலிம்பிக்ஸ்

துப்பாக்கி சுடும் போட்டி - ஏமாற்றம் தந்த இளவேனில் வாலறிவன்

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இன்று நடந்த தகுதிச்  சுற்று போட்டியில்,  இந்தியாவின் இளவேனில் வாலறிவன்  இறுதி போட்டிக்குச்  செல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.  

Updated On : 24 ஜூலை, 2021 at 5:22 PM
துப்பாக்கி சுடும் போட்டி - ஏமாற்றம் தந்த இளவேனில் வாலறிவன்
பகிர்:

டோக்கியோ : ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இன்று நடந்த தகுதிச்  சுற்று போட்டியில்,  இந்தியாவின் இளவேனில் வாலறிவன்  இறுதி போட்டிக்குச்  செல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார் .  

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சவுரப் சவுத்ரி இறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில் , பெண்கள் 10 மீ.  'ஏர் பிஸ்டல்' பிரிவில் சிறந்த வீராங்கனையான தமிழகத்தைச் சேர்ந்த  இளவேனில், மூன்று முறை உலக கோப்பை தங்கம் வென்ற அபுர்வி சண்டேலா ஆகியோர் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில்  இன்று  பங்கேற்றனர்.  

இந்தியாவுக்கு  பதக்கம் பெற்றுத்  தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளவேனில் 626.5 புள்ளிகள் மட்டுமே எடுத்து 16வது இடம் பிடித்தார். 621.9 புள்ளிகள் எடுத்த அபுர்விக்கு 36வது இடம் கிடைத்தது. முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு  செல்வார்கள்  என்பதால், இருவரும் பதக்கக்  கனவை தவற விட்டனர்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.