முகப்பு
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு 2 கோடி பரிசுத்தொகை

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பளுதூக்குதல் போட்டியில் 49கிலோ எடைப்பிரிவில்  கலந்து கொண்ட மீராபாய் சானு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்

Updated On : 27 ஜூலை, 2021 at 11:08 AM
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு 2 கோடி பரிசுத்தொகை
பகிர்:

 
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பளுதூக்குதல் போட்டியில் 49கிலோ எடைப்பிரிவில்  கலந்து கொண்ட மீராபாய் சானு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கமும் அதுதான் என்பதால் பல்வேறு தரப்பினரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர் .

 நாடு திரும்பிய மீராபாய் சானு இந்திய இரயில்வேத்துறை ஊழியர் என்பதால் அதன் துறை  அமைச்சர் அஷ்வினி வைஷ்னவை நேரில் சந்தித்தார். 

 
சந்திப்பிற்கு பின் அமைச்சரின்   ட்விட்டர் பக்கத்தில்  " மீராபாய் சானு இந்திய ரயில்வே துறைக்காக விளையாடியவர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றதால் அவருக்கு 2 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் , பதவி உயர்வும் வழங்கப்பட இருக்கிறது " எனத் தெரிவித்தார்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.