ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ்: ஒரு பதக்கமும் பெறாமல் வெளியேறிய இந்திய வில்வித்தை வீரர்கள்

DIN

ஒலிம்பிக்ஸ் வில்வித்தைப் போட்டியில் முதல் பதக்கத்தைப் பெறப்போகும் இந்தியர் யார்? 

இந்தக் கேள்விக்கான விடை டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும் கிடைக்கவில்லை.

இன்று நடைபெற்ற ஆடவர் வில்வித்தைப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அடானு தாஸ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் வீரர் டகாஹருவிடம் 4-6 என்கிற கணக்கில் தோல்வியடைந்தார். இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற அனைத்து வில்வித்தை வீரர்கள் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்கள். மற்றுமொரு ஒலிம்பிக்ஸில் இந்திய வில்வித்தை வீரர்கள் யாரும் ஒரு பதக்கமும் பெறாமல் இந்திய ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்கள். 

சமீபத்தில் பாரிஸில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தினார்கள் இந்திய வில்வித்தை வீரர்கள். நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார்கள். தீபிகா குமாரி மட்டும் மூன்று தங்கங்களை வென்று அசத்தினார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சில பதக்கங்களை நிச்சயம் வெல்வார்கள் என்கிற நம்பிக்கை இந்திய வில்வித்தை வீரர், வீராங்கனைகள் மீது ஏற்பட்டது. ஆனால் நம்பிக்கை இந்தமுறையும் பலிக்கவில்லை.

அடானு தாஸ்

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் பிரிவில் பங்கேற்ற ஒரே இந்திய வீராங்கனையான தீபிகா குமாரி, காலிறுதியில் ஆன் சானிடம் தோல்வியடைந்தார். ஆன் சான் தங்கம் வென்று அசத்தினார். 

கலப்புப் பிரிவில் பிரவீன் ஜாதவும் தீபிகா குமாரியும் தென் கொரியாவுக்கு எதிராக 0-6 எனத் தோல்வியடைந்தார்கள். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் தருண்தீப் ராயும் பிரவீன் ஜாதவும் முதல் சுற்றில் வென்றாலும் அடுத்த ஆட்டத்தில் தோல்வியடைந்தார்கள். அடானு தாஸ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்துவிட்டார். ஆடவர் இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி காலிறுதியில் தோல்வியடைந்தது. 

ஒலிம்பிக்ஸ் வில்வித்தைப் போட்டியில் ஒரு பதக்கமாவது வெல்லவேண்டும் என்கிற இந்திய அணியினர் கனவு மேலும் தொடர்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT