ஒலிம்பிக்ஸ்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பி.வி. சிந்து தோல்வி

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிச்சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து தோல்வியடைந்துள்ளார். 

பாட்மிண்டன் அரையிறுதியில் சீன தைபேவைச் சேர்ந்த உலகின் நெ.1 வீராங்கனை தாய் சு யிங்கை எதிர்கொண்டார் சிந்து. இதற்கு முன்பு இருவருக்குமிடையே நடைபெற்ற ஆட்டங்களில் 13-5 என முன்னிலை பெற்றுள்ளார் தாய். கடைசி மூன்று ஆட்டங்களிலும் அவருக்கே வெற்றி கிடைத்துள்ளது.

முதல் கேமில் ஆரம்பத்தில் 11-8 என சிந்து முன்னிலை பெற்றிருந்தாலும் பிறகு சாதுர்யமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-18 என முதல் கேமைக் கைப்பற்றினார் தாய். அடுத்த கேமில் தாய் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 2-வது கேமை 21-12 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் தாய்.

இதையடுத்து நாளை நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீன வீராங்கனை ஹி பிங் ஜாவ்வுடன் சிந்து மோதவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT