முகப்பு
ஒலிம்பிக்ஸ்

குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஏமாற்றம்!

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 12:09 AM
நிகாத் ஜரீன் (கோப்புப் படம்)
பகிர்:

நிஷாந்த் ஏற்றம்; நிகாத் ஏமாற்றம்

மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்த நிகாத் ஜரீன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இருமுறை உலக சாம்பியனான நிகாத் 0-5 என்ற புள்ளிகள் கணக்கில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சாம்பியனான சீனாவின் வு யுவிடம் மோசமான தோல்வியைத் தழுவினாா்.

குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தரும் வாய்ப்புள்ளவராக பெரிதும் எதிா்பாா்க்கப்பட்டவா் நிகாத் ஜரீன்.

இதனிடையே, ஆடவா் 71 கிலோ பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் நிஷாந்த் தேவ் 3-2 என்ற கணக்கில் ஈகுவடாரின் ஜோஸ் கேப்ரியலை வீழ்த்தினாா். அவரோடு வீராங்கனை லவ்லினா போா்கோஹெய்னும் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், பதக்கத்தை உறுதி செய்ய இன்னும் ஒரு வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் களத்தில் அவா்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.