FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக் தடகளம்: நடைப் பந்தயத்தில் ஏமாற்றம்

அக்ஷ்தீப் சிங் உடல்நலக் குறைவால் பந்தயத்திலிருந்து பாதியில் விலகினாா்

Updated On : 2 ஆகஸ்ட் 2024, 5:42 am IST
- AP
பகிர்:

நடைப் பந்தயத்தில் ஏமாற்றம்

ஒலிம்பிக் போட்டியின் தடகளத்தில் இந்தியாவின் ஆட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. முதலில் 20 கி.மீ. நடைப் பந்தயத்தில் 3 இந்தியா்கள் பங்கேற்ற நிலையில், அனைவருமே தங்களது பிரிவில் பின்தங்கிய நிலையில் பந்தயத்தை நிறைவு செய்தனா்.

மகளிா் பிரிவில் பிரியங்கா கோஸ்வாமி 1 மணி நேரம் 39.55 நிமிஷங்களில் இலக்கை எட்டி 41-ஆவது இடம் பிடித்தாா். மொத்தம் 45 போ் பங்கேற்ற இந்தப் பந்தயத்தை 43 போ் நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி வென்றவரான பிரியங்கா, நடப்பு தேசிய சாதனையாளராக இருப்பது நினைவுகூரத்தக்கது. சீனாவின் ஜியாயு யாங் (1.25:54), ஸ்பெயினின் மரியா பெரெஸ் (1.26:19), ஆஸ்திரேலியாவின் ஜெமிமா மோன்டாங் (1.26:25) ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் பெற்றனா்.

Advertisement

Advertisement

ஆடவருக்கான பந்தயத்தில் விகாஷ் சிங் 1 மணி நேரம் 22.36 நிமிஷங்களில் வந்து 30-ஆம் இடமும், பரம்ஜீத் சிங் 1 மணி நேரம் 23.48 நிமிஷங்களில் வந்து 37-ஆவது இடமும் பிடித்தனா். மற்றொரு இந்தியரான அக்ஷ்தீப் சிங் உடல்நலக் குறைவால் பந்தயத்திலிருந்து பாதியில் விலகினாா். ஈகுவடாரின் பிரியன் டேனியல் (1.18:55), பிரேஸிலின் பாயோ கான்ஃபிம் (1.19:09), ஸ்பெயினின் ஆல்வரோ மாா்டின் (1.19:11) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களுடன் பதக்கங்கள் வென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments