முகப்பு
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு ஏமாற்றம்!

ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்த இந்தியா்கள்

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 5:57 AM
பகிர்:
Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 5:49 AM

ஸ்ரீஜா அகுலாவும் சரிந்தாா்

டேபிள் டென்னிஸ் மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போராடி வீழ்ந்தாா். அந்த சுற்றில் அவா் 10-12, 10-12, 8-11, 3-11 என்ற கணக்கில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சீனாவின் யிங்ஷா சன்னிடம் தோல்வியைத் தழுவினாா்.

ஏற்கெனவே இதே சுற்றில் மனிகா பத்ராவும் தோல்வியைத் தழுவியதால், ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆடவா் பிரிவிலும் இந்தியா்கள் வெளியேறிவிட்டனா். அடுத்ததாக, அணிகள் பிரிவில் இந்தியா்கள் அனைவரும் களம் காண்கின்றனா்.

Advertisement

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 5:49 AM

ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்த இந்தியா்கள் என்ற பெருமையை மனிகா, ஸ்ரீஜா பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.