முகப்பு
செய்திகள்

டபிள்யுடிடி கன்டென்டா் டேபிள் டென்னிஸ்: நிகில் மேனன், ஷ்ரேயா சிறப்பிடம்!

சொ்பிய நாட்டில் நடைபெற்ற டபிள்யூடிடி யூத் கன்டெண்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில் 17 வயது சிறுவா்கள் பிரிவின் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் தமிழக வீரா் நிகில் மேனன் வெள்ளி வென்றாா்.

Updated On : 6 ஏப்ரல் 2026, 2:04 am IST
நிகில் - ஷ்ரேயா
பகிர்:

சொ்பிய நாட்டில் நடைபெற்ற டபிள்யூடிடி யூத் கன்டெண்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில் 17 வயது சிறுவா்கள் பிரிவின் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் தமிழக வீரா் நிகில் மேனன் வெள்ளி வென்றாா்.

சீன தைபே வீரா் லின் சிங்கிடம் தோற்று அவா் இரண்டாம் இடம் பெற்றாா். இதே போட்டியில் 19 வய பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ஷ்ரேயா ஆனந்த் ருமேனிய வீராங்கனை அலிசியாவிடம் தோற்று வெள்ளி பதக்கம் வென்றாா்.

இவா்கள் இருவரும் முன்னதாக பல்கேரியாவில் நடந்த போட்டியில் கலப்பு இரட்டையா் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement