ஜோகோவிச் Andy Wong
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்: அல்கராஸை வீழ்த்தி முதல்முறையாக தங்கம் வென்றார் ஜோகோவிச்!

நோவக் ஜோகோவிச் முதல்முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.

விம்பிள்டன் சாம்பியன் அல்கராஸுடன் மோதிய இறுதிப் போட்டியில் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் வென்று அசத்தினார்.

இதுதான் ஜோகோவிச்சின் முதல் தங்கம். மேலும் ஆடவர் டென்னிஸ் ஒலிம்பிக்கில் வயதான வீரர் (37) ஒருவர் தங்கம் வெல்தும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வெற்றியில் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் தங்கத்தையும் சேர்த்துள்ளார்.

2008இல் வெண்கலம் வென்ற ஜோகோவிச்சுக்கு இது 2ஆவது பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டனில் இரண்டு முறை அலகராஸுடம் தோல்வியுற்ற ஜோகோவிச் இதில் வெற்றி பெற்றது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

4 கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றவர்களில் 5ஆவது நபராக இணைந்துள்ளார். ஸ்டெஃபி கிராஃப், ஆண்ட்ரே அகாசி, ரபேல் நடால், செரினா வில்லியம்ஸ் இதற்கு முன்பு இந்த சாதனையை படைத்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT