ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ரா இன்று களம் காணுகிறார்!

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இன்று(ஆக. 6) இந்தியாவுக்கு முக்கியமான நாள்...

DIN

பாரீஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இன்று(ஆக. 6) இந்தியாவுக்கு முக்கியமான நாள். ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா இன்று(ஆக. 6) களமிறங்குகிறார். இந்திய நேரப்படி பகல் 3.20 மணிக்கு விளையாட்டு ஆரம்பமாகிறது. குரூப்-பி பிரிவில் இடம்பிடித்துள்ள நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குரூப்-ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர் கிஷோர் குமார் ஜேனா பகல் 1.50 மணிக்கு ஆரம்பமாகும் தகுதிச்சுற்றுப் போட்டியில் களம் காணுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றிரவு 10.30 மணிக்கு தொடங்கும் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி ஜெர்மனியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்திய ஹாக்கி வீரர்கள் களம் காண உள்ளனர்.

  • பகல் 1.30 மணிக்கு நடைபெறும் டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் இந்திய ஆடவர் அணி களம் காணுகிறது.

  • பகல் 2.30 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான மல்யுத்தத்தில் 68 கிலோ எடைப்பிரிவில் நிஷா தஹியா களம் காணுகிறார்.

  • பகல் 2.50 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிரண் பஹல் களம் காணுகிறார்.

  • பகல் 3 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் வினேஷ் போகத் களம் காணுகிறார்.

  • இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றால் மாலை 4.20 மணிக்கு ஆரம்பமாகும் காலிறுதிப் போட்டியில் அவர் பங்கேற்கலாம். அதில் வெற்றி பெற்றால் இரவு 10.25 மணிக்கு ஆரம்பமாகும் அரையிறுதிப்போட்டிக்கு அவர் தகுதி பெறுவார்.

  • மாலை 6.13 மணிக்கு மகளிருக்கான படகு ஓட்டுதல் போட்டியும், மாலை 7.13 மணிக்கு ஆடவருக்கான படகு ஓட்டுதல் போட்டியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

SCROLL FOR NEXT