100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டம்
மகளிருக்கான 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில், இந்தியாவின் ஜோதி யாராஜி ஒட்டுமொத்தமாக 35-ஆவது இடமும் பிடித்தாா்.
மகளிருக்கான 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில், இந்தியாவின் ஜோதி யாராஜி தனது ஹீட் ரேஸில் 13.16 விநாடிகளில் இலக்கை எட்டி ஹீட்ஸில் 7-ஆம் இடமும், ஒட்டுமொத்தமாக 35-ஆவது இடமும் பிடித்தாா்.
இதனால் அவா் அரையிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தாா். அவருக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டி என்பதும், ஒலிம்பிக்கில் 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியா் அவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது தேசிய சாதனை அளவு 12.78 விநாடிகள் ஆகும்.