உயரம் தாண்டுதல்: சா்வேஷ் குஷோ் 13-ஆவது இடம்
ஆடவா் உயரம் தாண்டுதலில் தகுதிச்சுற்றோடு சா்வேஷ் குஷோ் வெளியேறினார்.
ஆடவா் உயரம் தாண்டுதல் தகுதிச்சுற்றில், சா்வேஷ் குஷோ் சிறந்த முயற்சியாக 2.15 மீட்டரை எட்டி, தனது குரூப்பில் 13-ஆவது இடமும், ஒட்டுமொத்தமாக 25-ஆம் இடமும் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறினாா்.
அவரது சீசன் பெஸ்ட் 2.25 மீட்டா் என்பது குறிப்பிடத்தக்கது.