ஹாக்கி அணிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
வெண்கலம் வென்ற ஹாக்கி அணிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி அணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது இந்திய அணி. ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற எங்கள் ஹாக்கி அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
Advertisement
Advertisement
50 வருடங்களுக்குப் பிறகு, இந்தியா மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்திய ஹாக்கியின் மறுமலர்ச்சிக்காக மிக உயர்ந்த பாராட்டுக்கு உரியது. அவர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த அணி காட்டும் நிலைத்தன்மையும், திறமையும், ஒற்றுமையும், போராடும் குணமும் நமது இளைஞர்களை ஊக்குவிக்கும். வாழ்த்துகள் இந்திய ஹாக்கி அணி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.