ஒலிம்பிக்ஸ்

ஹாக்கி அணிக்கு ராகுல் வாழ்த்து!

வெண்கலம் வென்ற ஹாக்கி அணிக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி அணிக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது இந்திய அணி. ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது.

இதுகுறித்து ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், ``இந்திய ஹாக்கி அணியின் அற்புதமான போட்டி; நீங்கள் அனைவரும் வெண்கலப் பதக்கம் வென்றதைக் கண்டு பெருமைப்படுகிறேன். ஸ்ரீஜேஷுக்கு நன்றி.

உங்களின் சிறப்புக்கான இடைவிடாத அர்ப்பணிப்பு எங்களை ஊக்கப்படுத்துகிறது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரும் இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்த நிலையில் மீண்டும் வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தல்.

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

ஆடவர் ஹாக்கியில் ஸ்பெயின் அணியை இந்தியா வென்றதன் மூலம் 4வது வெண்கலப் பதக்கத்தை பெற்றது.

இந்திய அணி ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் தனது 13வது பதக்கத்தை பெற்றுள்ளது.

1928 முதல் 2024 ஆம் ஆண்டு வரை 8 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துல்கர் சல்மானுடன் நடிக்கும் ஷ்ருதி ஹாசன்!

நாட்டை நிறுவியர்கள் எதிர்பார்த்த இந்தியாவை உறுதிப்படுத்தவே: சுதர்சன் ரெட்டி!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

மானே... ஜான்வி கபூர்!

ஆக. 26 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்!

SCROLL FOR NEXT