அங்கிதா பகத் படம்: எக்ஸ்
ஒலிம்பிக்ஸ்

வில்வித்தையில் இந்தியா தோல்வி!

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

DIN

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

பெண்கள் வில்வித்தை அணியில் இடம்பெற்றிருந்த அங்கிதா பகத், பாஜன் கெளர், தீபிகா குமாரி ஆகியோர் நெதர்லாந்து அணியிடம் 6-0 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தனர்.

பாஜன் கெளர் தனது முதல் செட் ஆட்டத்தில் வலுவான தொடக்கத்தைக் கொடுத்தார். எனினும், தீபிகா குமாரி, அங்கிதா ஆகியோரின் பங்களிப்பு தடுமாறியது.

இரண்டாவது செட் ஆட்டத்தில் பாஜன் உடன் அங்கிதா சிறப்பான பங்களிப்பை கொடுத்தார்.

எனினும் மூன்றாவது செட் ஆட்டத்தில் அங்கிதா தடுமாறியதால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியது.

இதனால் (பெண்கள் பிரிவு) வில்வித்தை போட்டியிலிருந்து இந்தியா வெளியேறியது.

ஆண்கள் குழு பிரிவுக்கான வில்வித்தைப் போட்டி நாளை (ஜூலை 29) நடைபெறவுள்ளது. இதில் இந்திய வீரர்கள் தீரஜ் பொம்மதேவரா, தரூண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நடப்பு ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை போட்டியில் முதல்முறையாக கலப்பு (ஆண்-பெண்) பிரிவுக்கும் போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா உடன் அங்கிதா பகத் பங்கேற்கிறார். கலப்புப் பிரிவில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT