அர்ஜூன் பபுதா  படம்: எக்ஸ்
ஒலிம்பிக்ஸ்

துப்பாக்கி சுடுதலில் மற்றொரு பதக்கம்? இறுதிப் போட்டியில் அர்ஜூன்!

பாரீஸ் ஒலிம்பிக்கில் அர்ஜூன் பபுதா, 630.1 புள்ளிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் அர்ஜூன் பபுதா முன்னேறினார்.

ஆண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் (பிஸ்டல்) பிரிவில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா, 630.1 புள்ளிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு இந்திய வீரர் சந்தீப் சிங் 629.3 புள்ளிகளை எடுத்தார். இதன்மூலம் இறுதி வாய்ப்பை சந்தீப் இழந்தார்.

எனினும், இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் அர்ஜூன் முன்னேறினார். அவருக்கான இறுதிப்போட்டி நாளை (ஜூலை 29) மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தற்போது அர்ஜூனும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால், ஆண்கள் துப்பாக்கி சுடுதல் பிரிவிலும் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதல் பிரிவில் மட்டும் அர்ஜூன் பபுதா, சந்தீப் சிங், அஸ்வரே பிரதாப் சிங், ஸ்வப்னில் குஷாலே, அர்ஜூன் சீமா, சரப்ஜோத் சிங், அனீஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து, பிரித்விராஜ் தொண்டைமான், அனன்ஜீத் சிங் நருகா ஆகிய 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT