தீபிகா குமாரி படம் | olympics2024
ஒலிம்பிக்ஸ்

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: இந்திய வீராங்கனை அசத்தல்!

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தையில் இந்திய வீராங்கனை காலிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்று முன்னேறினார்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

உலகின் முன்னாள் நம்பர்.1 வீராங்கனையான இந்திய வில்வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி, பெண்களுக்கான தனிநபர் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று, பாரீஸ் ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்று முன்னேறினார்.

நான்கு முறை ஒலிம்பியனான தீபிகா, புதன்கிழமை லெஸ் இன்வாலைட்ஸ் மைதானத்தில் நடந்த 32 ஆவது சுற்றில் நெதர்லாந்து வில்வீரர் குயின்டி ரோஃபெனை 6-2 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

தீபிகா முதல் செட்டில் வெற்றிபெற்றார். ஆனால், ரோஃபென் இரண்டாவது செட்டை சமன் செய்தார். இருப்பினும், தீபிக குமாரி, அடுத்த இரண்டு செட்களில் வெற்றியை தன் வசப்படுத்தினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெர்மன் வில்வித்தை வீராங்கனையான மிச்செல் க்ரோப்பனை எதிர்த்து, வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி (சனிக்கிழமை) மதியம் நடக்கும் பெண்களுக்கான தனிநபர் வில்வித்தைக்கு முந்தைய காலிறுதிப் போட்டியில் தீபிகா மோதுகிறார்.

இந்திய வீராங்கனை பஜன் கவுர், சனிக்கிழமை நடைபெறும் 16வது பெண்கள் சுற்றில், இரண்டு முறை ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்ற தியானந்தா சொய்ருனிசாவை எதிர்கொள்ள இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வம்பிழுத்த திக்வேஷ் ரதி: சிக்ஸர் அடித்து நோட்புக் செலிபிரேஷன் செய்த நிதீஷ் ராணா!

முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜக்தீப் தன்கர் விண்ணப்பம்!

ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

SCROLL FOR NEXT