ஸ்பெஷல்

மும்பை இந்தியன்ஸ் 165 ரன்கள் குவிப்பு

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டி தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 165 ரன்கள் குவித்தது.

Raghavendran

2018-ம் ஆண்டு 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் முதல் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மோதுகிறது.

துவக்க விழா மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை மாலை கோலாகலமாகத் துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 40, சூர்யகுமார் யாதவ் 43, க்ருணால் பாண்டியா 41* ரன்கள் விளாசினார். சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஷேன் வாட்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT