முகப்பு
ஸ்பெஷல்

சன்ரைஸர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதல் பேட்டிங்

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டியின் 7-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:44 PM
பகிர்:

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டியின் 7-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதுவரை 10 முறை இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. அவற்றில் தலா 5 வெற்றிகளைப் பெற்று சரிசமமாக உள்ளது. அதிலும் ஹைதராபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்களில் சன்ரைஸர்ஸ் 3 முறையும், மும்பை இந்தியன்ஸ் 2 முறையும் வென்றுள்ளன.

போட்டி நடைபெறும் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, 13 இன்னிங்ஸ்களில் 429 ரன்கள் குவித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 144.44 ஆகும். 

இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்:

ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷிகர் தவன், கேன் வில்லியம்சன் (கேப்டன்), மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, யூசுப் பதான், ஷகிப்-அல்-ஹசன், ரஷித் கான், பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கௌல், சந்தீப் ஷர்மா.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), இவன் லீவிஸ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், க்ருணால் பாண்டியா, கெய்ரன் பொல்லார்ட், பென் கட்டிங், மயங்க் மார்கண்டே, பிரதீப் சங்வான், முஸ்தாபிஸூர் ரஹ்மான், ஜஸ்ப்ரீத் பும்ரா.

முழு கட்டுரையைப் படிக்க →