கடந்த 7-ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப். 7-ம் தேதி தொடங்கி 51 நாள்கள் நடக்கிறது. மொத்தம் 60 போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், தில்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் ஆரம்பித்து 10 நாள்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் ஐபிஎல்-லில் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் சிக்ஸர்களை அதிகம் அடித்த வீரர்கள் யார் என்று பார்க்கலாம்.
ஐபிஎல் 10 நாள்கள் - அதிக சிக்ஸர்கள்
வரிசை எண் | பெயர் | ஆட்டங்கள் | ரன்கள் | ஸ்டிரைக் ரேட் | அதிக ரன் | சிக்ஸர்கள் |
1 | ரஸல் (கொல்கத்தா) | 3 | 153 | 239.06 | 88* | 19 |
2 | சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான்) | 4 | 178 | 163.30 | 92* | 12 |
3 | டிவில்லியர்ஸ் (பெங்களூர்) | 4 | 121 | 149.38 | 57 | 10 |
4 | கே.எல். ராகுல் (பஞ்சாப்) | 3 | 135 | 198.52 | 51 | 8 |
5 | பிராவோ (சென்னை) | 3 | 80 | 222.22 | 68 | 8 |