முகப்பு
ஸ்பெஷல்

உடல்நலக்குறைவிலிருந்து மீண்டு வந்தார் இம்ரான் தாஹிர்: நாளைய ஆட்டத்தில் பங்கேற்பாரா?

ஹைதரபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் உடல்நலக்குறைவால் இம்ரான் தாஹிர் இடம்பெறவில்லை...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:50 PM
பகிர்:

ஹைதரபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் உடல்நலக்குறைவால் இம்ரான் தாஹிர் இடம்பெறவில்லை. இந்நிலையில் தான் குணமாகிவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் தாஹிர். 

நாளைய ஆட்டத்தில் பங்கேற்கத் தயாராக உள்ளேன். நான் குணமாகிவிட்டேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. பெங்களூருக்கு வந்துவிட்டேன். எடுடா வண்டிய, போடுடா விசிலை என்று ட்வீட் செய்துள்ளார். பெங்களூரில் நாளை நடைபெறுகிற ஆட்டத்தில் சென்னை - பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

முந்தைய ஆட்டத்தில் தாஹிருக்குப் பதிலாக டுபிளெஸ்ஸிஸ் அணியில் இடம்பிடித்தார். இந்நிலையில் தாஹிர், சிஎஸ்கே அணியில் இடம்பெற வேண்டுமென்றால் டுபிளெஸ்ஸிஸ் அல்லது சேம் பில்லிங்ஸ் ஆகிய இருவரில் ஒருவர் அணியிலிருந்து வெளியேறவேண்டிய சூழல் உள்ளது. இருவருமே முக்கியமான பேட்ஸ்மேன்கள் என்பதால் தோனி செய்யப்போகிறார் என்பது நாளைதான் தெரியவரும்.  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னைக்கு இது 4-ஆவது வெற்றியாகும். அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களை எதிர்கொண்ட ஹைதரபாத்துக்கு இது 2-வது தோல்வி. ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அடுத்து 183 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹைதரபாத், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய ராயுடு ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.