ஸ்பெஷல்

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் காயம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளருக்கு காயம் ஏற்பட்டது.

Raghavendran

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டம் புணேவில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. 24 வயதான தீபக் சாஹர், நடப்பு சீசனுக்கான ஐபிஎல் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் பங்கேற்ற 7 போட்டிகளிலும் விளையாடினார். நேர்த்தியான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த சாஹர், 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரி 23.17 ஆகும். 

தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் குறித்த முழு விழிப்புணர்வு சாஹருக்கு இருந்ததால் தான் போட்டியின் போது அதை சரியான நேரத்தில் கணித்து, ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். அவரது காயம் குணமாக இரு வார காலம் ஓய்வு தேவைப்படுகிறது. இது சென்னை அணிக்கு மிகப் பெரிய இழப்பு என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT