புனேவில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் பிளேஆஃப் ஆட்டங்கள் கொல்கத்தாவுக்கு மாற்றம்!
சென்னையில் நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கேவின் ஆட்டங்கள் புணேவுக்கு மாற்றப்பட்டதையடுத்து...
ஸ்பெஷல்புனேவில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் பிளேஆஃப் ஆட்டங்கள் கொல்கத்தாவுக்கு மாற்றம்!
சென்னையில் நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கேவின் ஆட்டங்கள் புணேவுக்கு மாற்றப்பட்டதையடுத்து...
11-வது இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி மே 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தில்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.
56 லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் முதலாவது தகுதிச்சுற்றிலும், அடுத்த 2 அணிகள் வெளியேற்றுதல் சுற்றிலும்(எலிமினேட்டர்) மோதும். முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். தோல்வியைச் சந்தித்த அணி எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியுடன் 2-வது தகுதிச்சுற்றில் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும்.
ஐபிஎல் போட்டியில் இரண்டாம் இடம் பிடிக்கும் நகருக்கு அடுத்த வருட பிளே ஆஃப் போட்டிகளை (2-வது மற்றும் மூன்றாவது ஆட்டங்கள்) நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். அதன் அடிப்படையில் இந்த வருட பிளே ஆஃப் போட்டிகளை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று புணே சார்பில் மஹாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்தது. உண்மையில் இந்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரிக்கும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஆச்சர்யப்படும்விதத்தில் பிசிசிஐ சம்மதம் தெரிவித்தது.
இதன்படி பிளே ஆஃப் போட்டிகளின் முதல் ஆட்டம் மும்பையிலும் மற்ற இரு ஆட்டங்கள் புணேவிலும் நடைபெற இருந்தன. இறுதிப் போட்டி மே 27 அன்று மும்பையில் நடைபெறுகிறது.
ஆனால் சென்னையில் நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கேவின் ஆட்டங்கள் புணேவுக்கு மாற்றப்பட்டதையடுத்து, புணேவுக்கு வழங்கப்பட்ட பிளேஆஃப் ஆட்டங்களை கொல்கத்தாவுக்கு மாற்றியுள்ளது பிசிசிஐ. இத்தகவலை ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா உறுதி செய்துள்ளார்.
அதன்படி மே 23 மற்றும் 25 தேதிகளில் கொல்கத்தாவில் பிளேஆஃப் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல் பிளேஆஃப் ஆட்டம் மும்பையில் மே 22-ல் நடைபெறும். பிறகு இறுதிச்சுற்று மே 27 அன்று மும்பையில் நடைபெறவுள்ளது.