முகப்பு
செய்திகள்

சென்னை டெஸ்ட்: ஜோ ரூட் புதிய சாதனை

இதற்கு முன்பு 5 வீரர்கள் ஒரே அணியுடன் 9 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதம் எடுத்துள்ளார்கள்.

Updated On : 16 டிசம்பர், 2016 at 5:24 PM
பகிர்:

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்தப் பதினோரு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் தொடர்ச்சியாக அரை சதம் எடுத்துள்ளார்.

இந்தியாவுடன் விளையாடிய 5 டெஸ்டுகள் கொண்ட இரு தொடர்களிலும் அவர் தொடர்ச்சியாக ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் அரை சதம் எடுத்துள்ளார். 

டான் பிராட்மேன், இங்கிலாந்துக்கு எதிராக 14 முறை தொடர்ச்சியாக அரை சதங்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு 5 வீரர்கள் ஒரே அணியுடன் 9 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதம் எடுத்துள்ளார்கள்.

Advertisement

இந்தியாவுக்கு எதிராக இதுபோல அதிகமுறை (11) அரை சதங்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ரூட். சென்னை டெஸ்டில் அவர் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட் எடுத்த ரன்கள்

73 & 20
154*
13 & 66
3 & 56
77
149*
124 & 4
53 & 25
15 & 78
21 & 77
88

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.