செய்திகள்

சென்னை டெஸ்ட்: கருண் நாயர் சதம்!

தனது முதல் சதத்தை 185 பந்துகளில் பூர்த்தி செய்தார்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் சதம் எடுத்து அசத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 157.2 ஓவர்களில் 477 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 146, ஜோ ரூட் 88, லியாம் டாசன் ஆட்டமிழக்காமல் 66, ஆதில் ரஷித் 60 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 108 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் குவித்தது. கருண் நாயர் 71, முரளி விஜய் 17 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்கள்.

இன்றும் முதல் ஒரு மணி நேரம் இருவரும் கவனமாக ஆடி இந்திய அணியின் ஸ்கோர் 400 தாண்ட உதவினார்கள். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கருண் நாயர் இன்று தனது முதல் சதத்தை 185 பந்துகளில் பூர்த்தி செய்தார். இவர் சதம் எடுத்தபிறகு, அடுத்த ஓவரில் 29 ரன்களில் ஆட்டமிழந்தார் முரளி விஜய். இந்திய அணி 126 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 437 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT