செய்திகள்

தோல்வியே இல்லாத வருடம்: சென்னை டெஸ்ட்டின் முக்கிய அம்சங்கள்!

இந்த வருடம் இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோற்கவில்லை.

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. 2012-ல் இங்கிலாந்திடம் கண்ட படுதோல்விக்கும் பதிலடி கொடுத்துள்ளது இந்தியா. இந்த டெஸ்டின் முக்கிய புள்ளிவிவரங்கள்:

* முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் தோல்வி கண்ட அணிகளில் இங்கிலாந்து அணி முதலிடம் பிடித்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் 477 ரன்கள் எடுத்தபின்பும் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வி கண்டது. 

477 இங்கிலாந்து - இந்தியா, 2016 

432 இங்கிலாந்து - ஆஸ்திரேலியா, 2001 

407 பாகிஸ்தான் - இந்தியா, 2004

* இந்த வருடம் இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோற்கவில்லை. 9 டெஸ்டுகளில் வென்றுள்ளது. ஒரு தோல்வியும் பெறாமல் ஒருவருடம் அதிக டெஸ்ட் வெற்றிகள் கண்ட அணி இங்கிலாந்து. 2004-ம் வருடம் ஒரு தோல்வியுமின்றி 11 வெற்றிகள் பெற்றது. அதேபோல ஆஸ்திரேலிய அணி 2006ம் வருடம் 10 வெற்றிகளைப் பெற்றது. 9 டெஸ்ட் வெற்றிகளுடன் இந்திய அணி மூன்றாம் இடத்தில் உள்ளது.

* இந்திய அணி இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடையாமல் உள்ளது. இதற்கு முன்பு, செப்டம்பர் 1985 - மார்ச் 1987 காலகட்டத்தில் தோல்வியின்றி 17 டெஸ்ட் போட்டிகள் விளையாடியதே சாதனையாக இருந்தது. அதை கோலி அணி முறியடித்துள்ளது. செப்டம்பர் 1985 - மார்ச் 1987 காலகட்டத்தில் இந்திய அணி 4 டெஸ்டுகளில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால் கோலி அணி இந்த 18 டெஸ்டுகளில் 14 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

* 4-0 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்தியா. இதற்கு முன்பு முதல்தடவையாக 4-0 என ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2012-13-ல் வென்றது. அதற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் 4-0 என வென்றுள்ளது இந்திய அணி. 

* இதுவரை ஜடேஜா எடுத்த 106 விக்கெட்டுகளில் 16.03% விக்கெட்டுகள் எதிரணி கேப்டனின் விக்கெட்டுகளாகும். 

* இந்த டெஸ்ட் தொடரில் 655 ரன்கள் பெற்று தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார் கோலி.

* முதல் 22 டெஸ்டுகளில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன்களில் மூன்றாம் இடத்தில் உள்ளார் கோலி. 17 - ஸ்டீவ் வாஹ், 15 - பாண்டிங், 14 - கோலி (மற்றும் 3 பேர்)

* இங்கிலாந்து இன்று: 
104/0 - 39.3 ஓவர்கள் 
103/10 - 48.3 ஓவர்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT