செய்திகள்

ஐசிசி தரவரிசை பட்டியல்: அஸ்வின் 'நம்பர் 1'

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பெற்றுள்ளார்.

DIN

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அஸ்வின் மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும் தொடர் நாயகன் விருதையும் அவரே வென்றிருந்தார். தற்சமயம் அவர் 39 டெஸ்ட் போட்டிகளில் 220 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த போட்டித் தொடர் துவங்குவதற்கு முன்பு தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்த அஸ்வின், இந்த வெற்றியின் காரணமாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் ஆகியோரை பின்னுக்கு தள்ளி, 900 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை புஜாரா 14-ஆவது இடத்திலும், விராத் கோலி 16-ஆவதுஇடத்திலும் உள்ளனர்.

ஆல் ரவுண்டர்களை பொறுத்தத வரை இந்தியாவை ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT