முகப்பு
செய்திகள்

முதல் ஒருநாள் போட்டி: சுரேஷ் ரெய்னா விலகல்!

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து... 

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார்.

காய்ச்சல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இத்தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பார் எனத் தெரிகிறது. 

இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர் சமீபத்தில் கூடி முதல் 3 ஆட்டங்களுக்கான இந்திய அணியைத் தேர்வு செய்தனர். தொடக்க வீரர்களான ஷிகர் தவன், கே.எல்.ராகுல் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அந்த இடத்துக்கு மன்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார் காயமடைந்துள்ளதால், உமேஷ் யாதவ், தவல் குல்கர்னி, ஜஸ்பிரீத் பூம்ரா, ஹார்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அமித் மிஸ்ரா, அக்ஷர் படேல், ஜெயந்த் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முதல் ஒருநாள் போட்டிக்கான அணி விவரம்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி, மணீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, ஜஸ்பிரீத் பூம்ரா, தவல் குல்கர்னி, உமேஷ் யாதவ், மன்தீப் சிங், கேதார் ஜாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.