செய்திகள்

ரஞ்சி: தினேஷ் கார்த்திக் அதிரடி சதம்! 400 ரன்கள் குவித்தது தமிழக அணி!

DIN

ரயில்வேக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 3-வது நாள் தேநீர் இடைவேளையின்போது தமிழக அணி 372 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தினேஷ் கார்த்திக்கின் அதிரடி சதத்தால் தமிழக அணி வலுவான நிலையை அடைந்துள்ளது.

பிலாஸ்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தமிழகம் தனது முதல் இன்னிங்ஸில் 42.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ரங்கராஜன் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார்.
ரயில்வே தரப்பில் பன்சால் 4 விக்கெட்டுகளையும், மஞ்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ரயில்வே அணி 64 ஓவர்களில் 173 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தேவ்தார் 47 ரன்களும், அரிந்தாம் கோஷ் ஆட்டமிழக்காமல் 46 ரன்களும் எடுத்தனர்.
தமிழகம் தரப்பில் நடராஜன் 4 விக்கெட்டுகளையும், விக்னேஷ், ரங்கராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தமிழக அணி, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 60 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அபிநவ் முகுந்த் 98, காந்தி 41 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

109 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தது தமிழக அணி. முகுந்த் சதத்தைப் பூர்த்தி செய்து 100 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு களமிறங்கிய தினேஷ் கார்த்திக், கடந்தமுறை மோசமாக ஆடியதைச் சரிகட்டும் விதமாக அதிரடியாக ஆடினார். அவருடைய ஆட்டம், தமிழக அணிக்குச் சாதகமாக அமைந்தது. சிக்ஸ் அடிக்க முயலாமல் தொடர்ந்து பவுண்டரிகளாக அடித்தார் தினேஷ் கார்த்திக். 82 பந்துகளில் சதத்தை எட்டினார். இது அவருடைய 25-வது முதல்தர சதமாகும். இவருக்கு நல்ல இணையாக விளங்கினார் இந்திரஜித்.  

கடைசியில், 145 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் 163 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் தினேஷ் கார்த்திக். இந்திரஜித், மலோலன் ரங்கராஜன் ஆகியோர் அரை சதம் எடுத்தார்கள். தமிழக அணி, 132 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 452 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. ரயில்வே அணிக்கு 401 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT