செய்திகள்

சிட்டகாங் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி

DIN

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 105.5 ஓவர்களில் 293 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் மொயீன் அலி 68, ஜானி பேர்ஸ்டோவ் 52 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 6 விக்கெட் எடுத்தார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 86 ஓவர்களில் 248 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக தமிம் இக்பால் 78 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 45 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 80.2 ஓவர்களில் 240 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 85 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து 286 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 78 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்திருந்தது. சபீர் ரஹ்மான் 59, தைஜுல் இஸ்லாம் 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி நாளான திங்கள்கிழமை களமிறங்கிய வங்கதேச அணி, அடுத்த 10 ரன்களுக்கு எஞ்சிய இரு விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த இரு விக்கெட்டுகளையும் பென் ஸ்டோக்ஸ் வீழ்த்தினார். இதனால் 81.3 ஓவர்களில் 263 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம். சபீர் ரஹ்மான் 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து தரப்பில் கேரத் பட்டி 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் கலக்கிய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து. 2-ஆவது போட்டி வரும் வெள்ளிக்கிழமை டாக்காவில் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT