செய்திகள்

டிஎன்பிஎல் போட்டியை ஊக்குவிக்க சென்னை வந்த கெய்ல், பிராவோ!

டிஎன்பிஎல் டி20 போட்டியை ஊக்குவிக்கும் வகையில் புகழ்பெற்ற மே.இ. அணிகள் வீரர்களான கெயில் மற்றும் பிராவோ ஆகியோர்...

DIN

டிஎன்பிஎல் டி20 போட்டியை ஊக்குவிக்கும் வகையில் புகழ்பெற்ற மே.இ. அணிகள் வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் பிராவோ ஆகியோர் சென்னைக்கு வருகை தந்துள்ளார்கள். 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 28 லீக் ஆட்டங்கள், 2 அரையிறுதி, இறுதி ஆட்டம் என மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் 12 ஆட்டங்களும், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 10 ஆட்டங்களும், திருநெல்வேலியில் 9 ஆட்டங்களும் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளை எதிர்த்து தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். செப்டம்பர் 18-ஆம் தேதி போட்டி நிறைவடைகிறது. இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.3 கோடியே, 40 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதி வரை முன்னேறும் அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும், கடைசி 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்கப்படவுள்ளன.

டிஎன்பிஎல் டி20 போட்டியை ஊக்குவிக்கும் வகையில் புகழ்பெற்ற மே.இ. அணிகள் வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் பிராவோ ஆகியோர் சென்னைக்கு வருகை தந்துள்ளார்கள். இதுவரை மேத்யூ ஹேடன், ரெய்னா, பிரெட் லீ ஆகியோர் டிஎன்பிஎல் போட்டியை விளம்பரப்படுத்தியுள்ளார்கள். இதனையடுத்து கெய்ல், பிராவோ ஆகியோர் வருகை தந்துள்ளார்கள். சென்னை வேலம்மாள் பள்ளிக்குச் சென்று இருவரும் மாணவர்கள் மத்தியில் உரையாடினார்கள். அடுத்ததாக, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிற காரைக்குடி - மதுரை இடையேயான போட்டியையும் இருவரும் காண உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

SCROLL FOR NEXT