செய்திகள்

ஜப்பான் ஓபன் காலிறுதியில் ஸ்ரீகாந்த்

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

DIN

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த், சகநாட்டவரான அஜய் ஜெயராமை எதிர்கொண்டார்.
முதல் செட்டை ஸ்ரீகாந்த் 21-16 என்ற கணக்கில் வென்றிருந்த நிலையில், அஜய் ஜெயராம் கணுக்கால் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
காயம் குறித்துப் பேசிய ஜெயராம், "எனது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் அது தீவிரமான காயமாகத் தெரியவில்லை. அதனால் சில தினங்கள் ஓய்வெடுத்துவிட்டால் கொரியா ஓபனில் விளையாடுவதற்கு தயாராகிவிடுவேன்' என்றார்.
ஸ்ரீகாந்த் தனது காலிறுதியில் ஜெர்மனியின் மார்க் ஸ்வைப்லரை சந்திக்கிறார். ஸ்வைப்லருடன் இதுவரை 3 ஆட்டங்களில் மோதியுள்ள ஸ்ரீகாந்த், அதில் 2-இல் வெற்றி கண்டுள்ளார். அதனால் ஜப்பான் ஓபன் காலிறுதியில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின்
எச்.எஸ்.பிரணாய் 16-21, 19-21 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ùஸல்சென்னிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுநேத்ரா பவாருடன் என்சிபி தலைவர்கள் சந்திப்பு!

தேசியவாத காங்கிரஸை இணைக்க அஜித் பவார் விரும்பினாரா? - சரத் பவார் பதில்!

234 தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் நாளை முதல் பரப்புரை!

“எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப்போவதில்லை” - முதல்வர் மு . க. ஸ்டாலின்!

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..! சூடுபிடிக்கும் யு19 உலகக் கோப்பை!

SCROLL FOR NEXT