செய்திகள்

கொல்கத்தா டெஸ்ட் போட்டியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்!

DIN

நேற்றே இந்தச் சந்தேகம் ஏற்பட்டது. கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாடுவாரா என்று.

ஆனால் அந்த அணியின் தொடக்க வீரரான டாம் லதாமோ, "வில்லியம்சனுக்கு சாதாரண உடல் நலக்குறைவுதான். பெரிய பிரச்னை எதுவும் இல்லை. போட்டிக்கு முன்னதாக உடற்தகுதி பெற்றுவிடுவார்' எனத் தெரிவித்தார். ஆனால் இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் இடம்பெறவில்லை.

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்கியது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் 250-ஆவது டெஸ்ட் போட்டி இது.

முதல் டெஸ்ட் போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி, 2-ஆவது போட்டியில் வென்று சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது. கடைசியாக 2012-இல் இதே கொல்கத்தா மைதானத்தில் இங்கிலாந்திடம் தோற்ற இந்திய அணி, அதன்பிறகு சொந்த மண்ணில் விளையாடிய 12 போட்டிகளில் ஒன்றில்கூட தோற்கவில்லை. 10 வெற்றிகளையும், 2 டிராவையும் பதிவு செய்துள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ராகுல், உமேஷ் யாதவ்வுக்குப் பதிலாக தவண், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பிடித்துள்ளார்கள். உடல்நலக்குறைவால் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ராஸ் டெய்லர் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால், ஹென்றி நிகோலஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT