முகப்பு
செய்திகள்

சிங்கப்பூர் ஓபன்: காலிறுதியில் பி.வி.சிந்து!

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Updated On : 13 ஏப்ரல், 2017 at 4:28 PM
பகிர்:

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சிந்து தனது இரண்டாவது சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பிறகு 19-21, 21-17, 21-8 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஃபிட்ரியானியைத் தோற்கடித்தார்.  

சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச மகளிர் பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மூன்று இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இது, அவருடைய அதிபட்ச தரவரிசையாகும். சர்வதேச தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறிய 2-ஆவது இந்திய வீராங்கனையான சிந்து 75,759 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில்
இருக்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார் சிந்து.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.