செய்திகள்

கோபிசந்த் மகளுக்கு இரட்டை சாம்பியன் பட்டம்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஜூனியர் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளிலும் இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்தின் மகள் காயத்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.

DIN

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஜூனியர் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளிலும் இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்தின் மகள் காயத்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.

15 வயதுக்குள்ட்பட்டோருக்கான மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் காயத்ரி 21-11, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான சமியா பரூக்கியை தோற்கடித்தார்.
15 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் காயத்ரி-சமியா பரூக்கி ஜோடி 21-17, 21-15 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் கெல்லி லாரிஸா-ஷெலான்ட்ரி வியோலா ஜோடியைத் தோற்கடித்தது.
காயத்ரி, சமியா ஆகிய இருவரும் கோபிசந்த் அகாதெமியில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... வாகனங்களைக் கொல்லும் விஷமா, எத்தனால்?

ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசினால் ஆயுள் சிறை

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

SCROLL FOR NEXT