செய்திகள்

முதல் டெஸ்ட்: மே.இ.தீவுகள்-244/7

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 81 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்தது.
ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடக்க வீரர் பிரத்வெயிட் ரன் ஏதுமின்றி வெளியேறினார்.
பின்னர் வந்த ஹெட்மியர் 11, ஷாய் ஹோப் 2, விஷால் சிங் 9, மற்றொரு தொடக்க வீரரான பாவெல் 33 என அடுத்தடுத்து வெளியேற, அந்த அணி 26.2 ஓவர்களில் 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ரோஸ்டன் சேஸ்-ஷேன் டெளரிச் ஜோடி 118 ரன்கள் சேர்க்க, மேற்கிந்தியத் தீவுகள் அணி சரிவிலிருந்து மீண்டது. ரோஸ்டன் சேஸ் 151 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 63, ஷேன் டெளரிச் 130 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 81 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் குவித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது கேப்டன் ஜேசன் ஹோல்டர் 30, தேவேந்திர பிஷூ 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT