செய்திகள்

ஐபிஎல்லில் இன்றைய ஆட்டங்கள்: ஜெயிக்கப் போவது யாரு? 

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் 19-ஆவது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

DIN

கொல்கத்தா: ஐ.பி.எல் பத்தாவது சீசனின் 19-ஆவது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

ராஜ்கோட்டில் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியும், கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மொத உள்ளன.

குஜராத் லயன்ஸ் அணி தான் விளையாடிய ஆறு போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி 3-வது வெற்றிக்காக குஜராத் அணி காத்திருக்கிறது.

அதே நேரம் பஞ்சாப் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. தனது கடைசி மூன்று ஆட்டங்களிலும் கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத் மற்றும் மும்பை அணிகளிடம் தோல்வியடைந்தது.

தனது தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து 3-வது வெற்றி பெறும் வேட்கையில் பஞ்சாப் அணி உள்ளது.

இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளது.

இதில் கொல்கத்தா அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. பெங்களூர் அணியோ 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைய 5 முக்கிய காரணங்கள்!

பாகிஸ்தானில் இந்தோனேசிய அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

ரன்வீர் சிங் காட்டில் மழை..! 3 நாளில் துரந்தர் பட வசூல் இவ்வளவா?

சென்னை, வடதமிழகத்தில் குளிர் அலை உருவாகும்! எப்படி இருக்கப்போகிறது?

அழகின் ரகசியம் என்ன? - பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷித் பதில்!

SCROLL FOR NEXT