செய்திகள்

சோலி முடிந்ததா பெங்களூர் ஐபிஎல் அணிக்கு?

14 புள்ளிகள் எடுத்த அணிகளும் பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளன. ஆனால் அதற்கு உத்தரவாதம் கிடையாது...

எழில்

பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெறவேண்டுமா? எடுத்து வை 16 புள்ளிகளை. இதுதான் ஐபிஎல் நடைமுறை.

14 புள்ளிகள் எடுத்த அணிகளும் பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளன. ஆனால் அதற்கு உத்தரவாதம் கிடையாது. கடந்த 9 வருட வரலாற்றில் 4 அணிகள் மட்டுமே 16 புள்ளிகளுக்குக் குறைவாக எடுத்து பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளன. எனவே கைவசம் 16 புள்ளிகள் என்றால் கட்டாயம் உள்ளே செல்லலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரில் நடைபெறுவதாக இருந்த ஆட்டம் மழையால் ரத்தானது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கிடைத்தது.

இதுவரை 8 ஆட்டங்கள் ஆடியுள்ள பெங்களூர் அணி இதுவரை 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ள 6 ஆட்டங்களையும் பெங்களூர் அணி வென்றால் மட்டுமே அதனிடம் 17 புள்ளிகள் இருக்கும். பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியும். ஆனால் ஓர் அணி தன்னுடைய கடைசி 6 ஆட்டங்களையும் வெல்ல வாய்ப்புண்டா? அதிலும் கெயில், கோலி, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட அதன் முன்னணி வீரர்கள் சரியாக ஆடாத நிலையில்?

சோலி முடிந்தது பெங்களூருக்கு! இந்த சோக நிலையைத் தாண்டியும் அந்த அணி ஒருவேளை பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெற்றால் அதைவிடவும் ஒரு செயற்கரிய செயல் இருக்கமுடியாது. இப்படி பெங்களூர் அல்லது கோலி ரசிகர்கள் கனவு காணலாம். ஆடுகளத்தில் நிலைமை வேறாக உள்ளதே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கமலுக்கு மட்டும் Extra Music போடுவார்! CM முன்னால் சொல்லிக்கிறேன்!”: ரஜினிகாந்த் கிண்டல்

விஜய் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அறநிலையத் துறை நிதியில் திருமணங்கள்! இபிஎஸ் மீது துணை முதல்வர் உதயநிதி விமர்சனம்!

மது அருந்திவிட்டு இளையராஜா போட்ட ஆட்டம்... ரஜினி பேச்சால் கலகலப்பு!

உலகளவில் சாதனை படைத்த விஜய்யின் விமானம்!

SCROLL FOR NEXT