செய்திகள்

ஐ.பி.எல். சீசன் 10: இன்று 'டபுள்ஸ்' : ஜெயிக்கப் போவது யாரு ?

ஐ.பி.எல். சீசன் 10 போட்டித் தொடரில் இன்று இரண்டு .போட்டிகள் நடக்க உள்ளது

DIN

மொகாலி: ஐ.பி.எல். சீசன் 10 போட்டித் தொடரில் இன்று இரண்டு .போட்டிகள் நடக்க உள்ளது.  

முதலில் மாலை 4 மணிக்கு பஞ்சாபின் மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதவுள்ளன.

பஞ்சாப் அணியானது 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. இந்த அணி ஏற்கனவே     டெல்லியிடம் 51 ரன்னில் தோல்வி அடைந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் பழி தீர்த்துக் கொள்ளுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

தனது தோல்வி பயணத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க அந்த அணி ஆவலாக காத்திருக்கிறது.

இரண்டாவதாக ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.

நடப்பு சாம்பியனான ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ளது. முன்னதாக  கொல்கத்தாவிடம் 17 ரன்னில் அந்த அணி ஏற்கனவே தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

SCROLL FOR NEXT