செய்திகள்

மலேசிய சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா முதல் வெற்றி!

மலேசியாவின் இபோக் நபியரில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

DIN

இபோக்: மலேசியாவின் இபோக் நபியரில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய ஆறு அணிகள் பங்குபெறும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நேற்று தொடங்கியது.

இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. பலத்த மழை காரணமாக 2 மணி நேரம் தாமதமாக இந்த போட்டி தொடங்கியதி. விறுவிறுப்பாக நடந்த ஆட்டமானது 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்நிலையில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து அணியை தனது இரண்டாவது ஆட்டத்தில்   எதிர்கொண்டது. பரபரப்பான இந்த போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல்: விடைபெற்றாா் அஸ்வின்

பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’ - பதக்க வாய்ப்பை இழந்தாா் குகேஷ்

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் விருப்பத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

SCROLL FOR NEXT