செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: கே.எல்.ராகுல், ஷிகர் தவன் முன்னேற்றம்

DIN

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் 9-ஆவது இடத்துக்கும், ஷிகர் தவன் 28-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் இரு சதங்களுடன் 358 ரன்கள் குவித்த ஷிகர் தவன், 10 இடங்கள் முன்னேறி 28-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம் அவர் தனது அதிகபட்ச தரவரிசையை எட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான கடைசி இரு போட்டிகளில் விளையாடிய ராகுல், இரு அரை சதங்களுடன் 142 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் அவர் இரு இடங்கள் முன்னேறி 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த ஜூலையில் ராகுல் 9-ஆவது இடத்தைப் பிடித்திருந்தாலும், இப்போது அதிகபட்சமாக 761 ரேங்கிங் புள்ளிகளை எட்டியிருக்கிறார்.
இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் 96 பந்துகளில் 108 ரன்கள் குவித்த ஹார்திக் பாண்டியா, 45 இடங்கள் முன்னேறி 68-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுதான் அவருடைய அதிகபட்ச தரவரிசை. இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா 4-ஆவது இடத்திலும், கேப்டன் கோலி 5-ஆவது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் முகமது சமி ஓர் இடம் முன்னேறி 19-ஆவது இடத்தையும், உமேஷ் யாதவ் ஓர் இடம் முன்னேறி 21-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 29 இடங்கள் முன்னேறி 58-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இலங்கை வீரர் சன்டாகன் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 132 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 16 இடங்கள் முன்னேறி 57-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்தின் ஆண்டர்சன், இந்தியாவின் அஸ்வின் ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஜடேஜா முதலிடத்தில் இருந்து 2-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அஸ்வின் 3-ஆவது இடத்தில் உள்ளார்.
அதேநேரத்தில் அணிகளின் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணிக்கு இரு ரேங்கிங் புள்ளிகள் கிடைத்துள்ளது. தற்போது இந்திய அணி 125 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதற்கடுத்தபடியாக தென் ஆப்பிரிக்கா 110 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், இங்கிலாந்து 105 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT