செய்திகள்

131 ரன்களில் வீழ்ந்தார் கோலி: மலிங்காவின் 300-வது விக்கெட்!

எழில்

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, மிகுந்த உற்சாகத்தோடு 4-வது ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில் இலங்கை அணி தொடர் தோல்விகளால் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால், இதுவரை விளையாடாதவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாக்குர் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். மேலும் குல்தீப் யாதவ், மனீஷ் பாண்டே ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சஹால், ஜாதவ், புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 

ஆரம்பம் முதல் அசத்தலாக விளையாடி வந்த கோலி, 76 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 29-வது சதமாகும். ஒருநாள் போட்டிகளில் அவரை விடவும் சச்சின் (49), பாண்டிங் (29) மட்டுமே அதிக சதங்களை எடுத்துள்ளார்கள்.

ஆட்டத்தின் பாதியிலேயே கோலி சதமெடுத்ததால் அவர் நிச்சயம் இரட்டைச் சதமெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோலி 131 ரன்களில் மலிங்காவின் பந்துவீச்சில் வீழ்ந்தார். இது மலிங்காவின் 300-வது ஒருநாள் விக்கெட்டாகும். 

மலிங்கா 300

100-வது விக்கெட் - கப்தில், 2010
200-வது விக்கெட் - தோனி, 2012
300-வது விக்கெட் - கோலி, 2017

வேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்த இலங்கை வீரர்கள்

202 - முரளிதரன் 
203 - மலிங்கா 
235 - வாஸ்
294 - ஜெயசூர்யா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT