செய்திகள்

ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்: ஷான் மார்ஷ் சதம், 442-க்கு ஆஸி. டிக்ளேர்

ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை 442 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

Raghavendran

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-ஆவது போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

சிறப்பாக ஆடிய ஷான் மார்ஷ் சதம் விளாசினார். 15 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 126 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டிம் பெய்ன் 57, கவாஜா 53, வார்னர் 47, கம்மின்ஸ் 44 ரன்கள் சேர்த்தனர்.

இங்கிலாந்து தரப்பில் புதுமுக வீரர் க்ரெய்க் ஓவர்டன் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பிராட் 2 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் மற்றும் வோக்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT