செய்திகள்

ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

Raghavendran

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

இந்த டெஸ்ட் தொடரை அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. ஜனவரி 14, 2018-ல் முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஜனவரி 19, 21, 26, 28 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:

இயன் மோர்கன் (கேப்டன்), மூயின் அலி, ஜானி பெர்ஸ்டோ, ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், டாம் குர்ரன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியம் பிளங்கட், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வேக்ஸ், மார்க் உட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT