செய்திகள்

2-வது டெஸ்ட் போட்டியையும் வென்றது நியூஸிலாந்து! தொடரைக் கைப்பற்றியது!

எழில்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது நியூஸிலாந்து அணி.

இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்யத் தொடங்கிய நியூஸிலாந்து அணி, 102.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து373 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜீத் ராவல் 84 ரன்களும், கிரான்ட்ஹோம் 58 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷானன் கேப்ரியல் அதிகபட்சமாக 4 விக்கெட் எடுத்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 221 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 152 ரன்கள் முன்னிலையுடன் நியூஸிலாந்து 2-ஆவது இன்னிங்ஸில் விளையாடத் தொடங்கியது.  8 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்திருந்தபோது வில்லியம்சன் டிக்ளேர் செய்தார். அப்போது, டெய்லர் 107 ரன்களுடனும், டிம் சௌதி 22 ரன்களுடன் களத்தில் இருந்தனர். அதைத் தொடர்ந்து, 444 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் மே.இ.தீவுகள் அணி களம் இறங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்தது. 8 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில், அந்த அணி இன்னும் 414 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. 

எதிர்பார்த்தது போல, 63.5 ஓவர்களில் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. சேஸ் மட்டும் அரை சதமெடுத்து 64 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூஸிலாந்துத் தரப்பில் வாக்னர் 3 விக்கெட்டுகளையும் செளதி, போல்ட், சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 2-வது டெஸ்ட் போட்டியை 240 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. சதமெடுத்து அசத்திய டெய்லர் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

இதையடுத்து டெஸ்ட் தொடரை 2-0 என்கிற கணக்கில் நியூஸிலாந்து அணி வென்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT