செய்திகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்

ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

Raghavendran

ஐபிஎல் போட்டித் தொடரின் அணிகளில் ஒன்றாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் திகழ்கிறது. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், அந்த அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். மேலும், டி20 போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். 42 வயதாகும் ஹாட்ஜ், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் புகழ்பெற்ற பிக்பாஷ் டி20 லீக்கில் மெல்போர்ன் ரெனெடாக்ஸ் அணிக்காக அடுத்த சீசனில் களமிறங்கவுள்ளார்.

இதுவரை டி20 போட்டிகளில் 7,000 ரன்களுக்கும் மேல் குவித்த 8 வீரர்களில் ஒருவராக உள்ளார். பஞ்சாப் அணியின் ஆலோசகராக வீரேந்திர சேவாக் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, குஜராத் லயன்ஸ் அணியின் பயிற்சியாளராக 2016 மற்றும் 2017 சீசன்களில் செயல்பட்டுள்ளார். அப்போது 2016 சீசனில் அந்த அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. காயங்கள் காரணமாக 2017 சீசனில் தகுதிச் சுற்றுப் போட்டிகளோடு வெளியேறியது.

ஐபிஎல் துவங்கியதில் இருந்து பங்கேற்று வரும் அணிகளில் கோப்பையை வெல்லாத 3 அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று. ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் இதர 2 அணிகளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு! வைரல் விடியோ!

எல் & டி பங்குகளை கொள்முதல் தொடர்ந்து, சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்வு!

ஓவல் டெஸ்ட்டில் ஸ்டோக்ஸ் விலகல்..! இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள்!

ரஷியாவில் 11 மணிநேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT